மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. திருணாமூல் காங்கிரஸ் கட்சி 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவியுள்ளார். தொடர்ந்து 13 சுற்றுகளாக பின்னடைவை சந்தித்த அவர், 14 ஆவது சுற்றின் முடிவில் முன்னிலை பெற்றார்.
இருப்பினும், இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியை விட குறைவான வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.