சீரடி: சீரடி சாய்பாபா என்று அழைக்கப்படும் சாய் பாபா, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. அவரது 16ஆவது வயதில், ஒரு வேப்பமரத்தடியில் தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு தெய்வ ஞானம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அன்று அவர் மகானாக மக்களுக்கு காட்சியளித்ததாகவும், சிறந்த ஆன்மிக தத்துவங்களை போதித்ததாகவும் தெரிகிறது. பின்னர், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏராளமான பக்தர்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர்.
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் அறியப்பட்ட அவதாரப் புருஷர் எனப் போற்றப்பட்டார். இவர் கடந்த 1918ஆம் ஆண்டு தசரா அன்று மகா சமாதியை அடைந்தார்.
சீரடியில் அவர் சமாதியான இடத்தை, இன்றளவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தலமாக எண்ணி வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சாய் பாபா சமாதியாகி இன்றுடன் 104ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி சீரடியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து, வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: துர்க்கை சிலையை நிறுவிய இஸ்லாமியர் ; கிராம மக்கள் நெகிழ்ச்சி