ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் ட்ரிபிள் என்ஜின் ஆட்சி... முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கருத்து! - ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் இரட்டை என்ஜின் ஆட்சி நடந்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் இணைந்து இருப்பதால் மாநிலத்தின் டிரிபிள் என்ஜின் ஆட்சி கிடைத்து உள்ளதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.

Eknath Shinde
Eknath Shinde
author img

By

Published : Jul 2, 2023, 6:22 PM IST

மும்பை : மகாராஷ்டிராவில் இரட்டை என்ஜின் ஆட்சி நடந்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் இணைந்து இருப்பதால் மாநிலத்தின் டிரிபிள் என்ஜின் ஆட்சி கிடைத்து உள்ளதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அஜித் பவார் தலைமையில் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்தனர். இதையடுத்து மகாரஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி தட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பான்ஸோடே, அனில் பாய்தாஸ் பட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இரட்டை என்ஜின் ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடந்து வரும் நிலையில் அஜித் பவார் வருகையால் ஆட்சிக்கு டிரிபிள் என்ஜின் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்த இந்த நிகழ்வில் அஜித் பவாருடன், அவரது ஆதரவாளர்கள் 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, "மகாராஷ்டிராவில் இரட்டை என்ஜின் ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடந்து வரும் நிலையில் அஜித் பவார் வருகையால் இந்த ஆட்சிக்கு மூன்றாவது என்ஜின் கிடைத்துள்ளது என்றார். மேலும் மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த ஆட்சியில் இணைந்த அஜித் பவார் மற்றும் பிற தலைவர்களையும் வரவேற்பதாக கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் அனுபவம் மாநிலத்தை மேலும் வலிமையாக்க உதவும் என்றும் அமைச்சரவையில் பங்கீடு குறித்து முடிவு செய்ய கால அவகாசம் இருப்பதாக கூறினார். கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் நான்கு, ஐந்து இடங்களைக் கைப்பற்றியது என்றும் இந்த முறை அதற்கும் வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

ஓராண்டு வளர்ச்சிப் பணிகளைப் பார்த்து, தங்களுக்கு ஆதரவு அளிக்க தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முடிவு செய்து உள்ளதாகவு அஜித் பவாருக்கு பல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் எம்பிக்கள், பிற தலைவர்களின் ஆதரவு உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

இந்த கூட்டணி மாநிலத்திற்கு நன்மைகளை ஏற்படுத்தும் என்றும் மஹா விகாஸ் அகாடி கூட்டணி உடைந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் ஒட்டுமொத்த மாநிலமே கிளீன் பவுல்டு ஆனதாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

இதையும் படிங்க : எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம் கவலையில்லை... இரண்டு நாட்களில் யதார்த்தம் புரியும்... சரத் பவார் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.