மும்பை: சுதந்திர தினவிழா உரையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நாட்டின் சுதந்திர தின ஆண்டு தெரியாமல் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, "உத்தவ் தாக்கரே அருகில் இருந்திருந்தால், கன்னத்தில் அறைந்திருப்பேன்" எனக் கூறியிருந்தார். இவரின் சர்ச்சைக்குரிய பேச்சினால், பாஜக - சிவசேனா தொண்டர்களிடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரி மாவட்டத்தில் உத்தவ் தாக்கரேவை அம்மாநில காவல் துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
முன்னதாக, இன்று காலை மும்பை உயர் நீதிமன்றத்தில் நாராயண் ரானே, முன்பிணை கோரி மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் முதன்முதலாக தமிழில் ஆளுநர் உரை - தமிழிசை சௌந்தரராஜன்