மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நேற்று (ஏப். 23) வாந்தி, மயக்கம் போன்றவற்றால் மருத்துவமனையில் ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், சிகிச்சைப் பலனின்றி மூன்று பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து வாணி காவல் நிலைய அலுவலர் டி.பி. பாடிகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருப்பதால் உயிரிழந்த ஐந்து பேர் மதுவை வாங்க முடியாமல் கிருமிநாசினியை உட்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைப் பலனின்றி அவர்கள் இன்று அதிகாலை (ஏப். 24) உயிரிழந்தனர்.
அவர்களில் இருவர் தத்தா லங்கேவர் (42), சுனில் டெங்டே, (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மற்றவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டு இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.