ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது - அமைப்பு

மகாராஷ்டிராவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது

author img

By

Published : Oct 20, 2022, 10:54 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பன்வேல் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) செயல்பாட்டாளர்கள் 4 பேரை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப் படை கைது செய்துள்ளனர். இதுகுறித்து அதன் அலுவலர்கள் கூறுகையில்,

“இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த இரண்டு செயல்பாட்டாளர்கள், பன்வெல்லில் சில தொழிலாளர்களின் சந்திக்கவுள்ளதாக மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, மும்பையில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் எங்கள் குழு சோதனை நடத்தி, நான்கு பிஎஃப்ஐ ஆர்வலர்களை கைது செய்தது.

விசாரணைக்குப் பிறகு, கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் பிஎஃப்ஐ பன்வெல் செயலாளர் அப்துல் ரஹீம், யாகூப் சயாத் மற்றும் உறுப்பினர்கள் மொயிஸ் மாட்டின் படேல், முகமது ஆசிப் கான் மற்றும் தன்வீர் ஹமித் கான், என கண்டறியப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற உலகளாவிய பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி, பி.எஃப்.ஐ மற்றும் அதன் பல கூட்டாளிகளை அரசாங்கம் கடந்த மாதம் ஐந்தாண்டுகளுக்கு தடை செய்தது.

PFI உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 250 க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் பல மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைது செய்யப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த ஒரு இளைஞர் கைது - என்ஐஏ அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.