ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் அமைச்சரவை மாற்றம்.. ஓங்கிய அஜித் பவார் கை.. ஷிண்டே டீம் அப்செட்! - NCP

மகாராஷ்டிராவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் பவாருக்கு நிதி இலாகா ஒதுக்கீடு
அஜித் பவாருக்கு நிதி இலாகா ஒதுக்கீடு
author img

By

Published : Jul 14, 2023, 10:03 PM IST

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் - அஜித் பவார் இடையே உடன்பாடு இன்மையின் காரணமாக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 30க்கும் மேற்பட்டோரை ஒன்று திரட்டி பாஜக - சிவசேனா கூட்டணியுடன் கை கோர்த்தார் அஜித் பவார். மராட்டியத் துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது அணியைச் சேர்ந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த ஜூலை 2ஆம் தேதி பதவி வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படாமலேயே இருந்தது. மேலும், அஜித் பவாருக்கு உள்துறை அல்லது நிதி இலாகா ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்த இரண்டு துறையும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் வசம் இருந்ததால் அது பிரித்துக் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

பின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தேவேந்திர பட்நாவிஸ் - அஜித் பவார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அஜித் பவார் அணியைச் சேர்ந்தோருக்கு இலாகா ஒதுக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்திக்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பாட்நாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் கடந்த தினங்களில் டெல்லி சென்றனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான ஆலோசனைக்குப் பின் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்ற 12 நாட்களுக்குப் பிறகு, அவருக்கு இன்று (ஜூலை 14) நிதி இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அஜித் பவார் அணியைச் சேர்ந்தோருக்கு இலாகாக்களைப் பிரித்து வழங்கினார். அதில் அமைச்சர்கள் சகன் புஜ்பலுக்கு உணவு மற்றும் சிவில் சப்ளை துறையும், அணில் பாட்டீலுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, பேரிடர் மேலாண்மைத் துறையும் வழங்கப்பட்டது.

மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட பொதுச்செயலாளரான சுனில் தாக்கரேவின் மகள் அதீதி தாக்கரே பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராகவும், விவசாயத் துறை அமைச்சராக மறைந்த முன்னாள் பாஜகவின் தலைவர் கோபிநாத் முண்டேவின் உறவினரான தனஞ்சய் முண்டேவுக்கும், அம்பேகோன் தொகுதியின் பிரிதிநிதியாக பதவி வகித்துக்கொண்டிருக்கும் திலிப் வால்ஸ் பாட்டீல் மாநிலத்தின் வருவாய், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சராக நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அமைச்சரவை மாற்றத்தில் சரத் பவாரின் கை ஓங்கியுள்ளதால் ஷிண்டே குழுவில் சிலர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Senthil Balaji Case: செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம்; ஆட்கொணர்வு மனு தள்ளுபடி: நீதிபதி கார்த்திகேயன் அதிரடி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.