கேரளா உள்பட 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. பறவைக்காய்ச்சலால் இதுவரை நாடு முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்தப் பறவைக்காய்ச்சல் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்துவருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா பர்பானி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு நடத்திவரும் கோழிப்பண்ணையில் 900 கோழிகள் உயிரிழந்துள்ளன. மாநிலத்தில் தற்போதுவரை பறவைக்காய்ச்சல் பாதிப்பு பதிவாகாத நிலையில், இந்த இறப்பு நிகழ்ந்துள்ளது.
இது குறித்து பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முல்கீஹர் கூறுகையில், “கோழிகள் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து தெரியவில்லை. இருந்தபோதிலும் தற்போது நாட்டில் பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், கோழிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...பறவை காய்ச்சல் பீதி! அச்சமின்றி கோழி, முட்டை உண்ண மருத்துவர்கள் அறிவுறுத்தல்!