மகாராஷ்டிரா(மும்பை): புனே அருகே வார்ஜே பகுதியில் காஷ்மீர் குங்குமப்பூ பயிர்களை கன்டெய்னர்களில் விவசாயம் செய்து அசத்தி வருகிறார், ஷைலேஷ் மோடக் என்ற இளைஞர்.
ஒரு கிராமுக்கு ரூ.300 முதல் ரூ.1500 என குங்குமப்பூவின் விலை அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு தேவையில் 3 முதல் 4 சதவீதம் மட்டுமே நம் நாட்டில் பயிரிடப்படுகிறது.
இதனிடையே, நாசிக்கைச் சேர்ந்த முன்னாள் மென்பொருள் பொறியாளர் ஷைலேஷ் மோடக் என்பவர் தனக்கு தோன்றிய யோசனையின்படி, குங்குமப்பூ செடிகளை கன்டெய்னர் ஒன்றில் விவசாயம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஷைலேஷ் தொடங்கிய இதற்கான சோதனையின் ஒரு பகுதியாக, ஏரோபோனிக் முறையில் கையாண்டார். சுமார் 320 சதுர அடியில் ஒரு கொள்கலனில் குங்குமப்பூ கிழங்கு பயிரிட்டுள்ளார். ஆரம்பத்தில் காஷ்மீரில் உள்ள பாம்பூரில் இருந்து 12 கிலோ குங்குமப்பூ கிழங்கை ஆர்டர் செய்து, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஒரு கொள்கலனில் நடவு செய்ததாக ஷைலேஷ் கூறினார்.
மேலும் அவர், குங்குமப்பூ கிழங்குகள் கண்டெய்னரில் வளர்ந்து இருப்பதைக் கண்டதும், காஷ்மீர் சென்று, அங்குள்ள குங்குமப்பூ விவசாயிகளிடம் இதுபற்றி பேசினேன். ஈரப்பதத்தை அதிகரிக்க ஏர் சர்க்குலேட்டர், சில்லர், ஏசி, டியூமிடிஃபையர், கரி அடிப்படையிலான தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறேன். மற்றும் கொள்கலனில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் என கூறினார்.
இதற்காக, வார்ஜே பகுதியில் ஒரு ட்ரேயில் 400 முதல் 600 கிழங்குகள் சேமித்து வைக்கும் ஒரு கொள்கலனை ஏற்படுத்தியுள்ளார். அதிலிருந்து சுமார் 1.5 கிலோ குங்குமப்பூவை விளைவித்ததாக ஷைலேஷ் நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய சந்தை விலையில் ஒரு கிராம் ரூ.499, ஒரு கிலோ ரூ.6.23 லட்சம் ஆகும். அதன்படி, இவர் இதுவரையில் இத்திட்டத்தில் ரூ.8 லட்சம் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மங்களூரு குண்டு வெடிப்பு: ஐஆர்சி அமைப்பு பொறுப்பேற்பு