ETV Bharat / bharat

மகராஷ்டிராவில் புதிய வகை கரோனா... மாநில அரசு எச்சரிக்கை...

மகாராஷ்டிராவில் புதிய வகை கரோனா பதிவாகியுள்ளது. எதிர்வரும் குளிர்காலம் மற்றும் பண்டிகை காலங்களில் கரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் கூடும் என்பதால், பொதுமக்கள் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Maha
Maha
author img

By

Published : Oct 18, 2022, 1:31 PM IST

மும்பை: மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையில் கரோனா பரவும் விகிதம் 17.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படும் மும்பை, ராய்கட், தானே உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

மகாராஷ்ட்ராவில் ஏற்கனவே BA.2.75, XBB ஆகிய கரோனா வகை பரவி வரும் நிலையில், BA.2.3.20 மற்றும் BQ.1 ஆகிய புதிய வகை ஒமைக்ரான் வைரசும் பரவத் தொடங்கியுள்ளது. தீவிரமாக பரவும் தன்மை கொண்ட BQ.1 ஒமைக்ரான் வைரசின் முதல் பாதிப்பு புனேவில் ஏற்பட்டுள்ளது. இந்த BQ.1 வகை ஒமைக்ரான் மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரும் குளிர்காலம் மற்றும் பண்டிகை காலங்களில் இந்த கரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், இந்த பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், இணை நோய்கள் உள்ள மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் மகாராஷ்ட்ரா அரசு அறிவுறுத்தியுள்ளது.

இன்புளுயன்சா உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. லேசான காய்ச்சல், ஃப்ளூ உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’ஸ்ரீஹரி’ என ஆரம்பித்து இந்தியில் மருத்துவக் குறிப்பு எழுதிய அரசு மருத்துவர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.