மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் அகதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. தேர்தலுக்குப் பின் பாஜகவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திவருகிறது.
இந்நிலையில், கூட்டணியின் உறுதித்தன்மை குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “மகாவிகாஸ் அகதி கூட்டணி ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. அதை அசைத்துபார்க்க நினைக்கும் பாஜகவின் திட்டம் ஒருபோதும் பலிக்காது.
அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் எதிர்க்கட்சிகளின் மீது முறையற்ற வகையில் மத்திய பாஜக அரசு ஏவிவருகிறது. ஆனால் இந்த பூச்சாண்டிகளை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சப்போவதில்லை” என கூறியுள்ளார்.
அண்மையில் பாஜகவிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மகாராஷ்டிரா தலைவர் ஏக்நாத் கட்சே மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தது. இதை கண்டிக்கும் விதமாகவே சரத் பவார் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2021 முதல் இந்த கைப்பேசிகளுக்கு வாட்ஸ்அப் கிடையாது!