போபால்: மத்தியப் பிரதேசத்தின் ரேவா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் காணவில்லை அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். செல்லும்போது பாஸ்போர்ட்டு, உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லை வழியாக ஒரு இளம்பெண் பாகிஸ்தான் செல்ல முற்பட்டுள்ளார். இவரை அலுவலர்கள் பிடித்து அமிர்தசரஸ், கரிண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய பிரதேச மாநிலத்தில் காணாமல் போன பெண் இவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது வீட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இந்த பெண்ணுக்கு ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த தில்ஷாத் கான் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனால் அந்தபெண் தில்ஷாத் கானை காண பாகிஸ்தான் செல்ல முயற்சி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: செகந்திராபாத் கலவரம்: குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்