ETV Bharat / bharat

மத்திய பிரதேசத்தில் பாஜகவிற்கு தொடர் வெற்றியை பெற்று தந்த சிவராஜ் சிங் சவுகான்..!

The unsung hero of BJP victory in Madhya Pradesh: மத்தியப் பிரதேச பாஜகவின் தொடர் வெற்றியைப் பெற்றுத் தரும் சிவராஜ் சிங் சவுகான். யார் இந்த சிவராஜ் சிங் சவுகான் என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்...

madhya-pradesh-assembly-polls-shivraj-singh-chouhan-profile
மத்திய பிரதேசத்தில் பாஜகவிற்கு தொடர் வெற்றியை பெற்று தந்த சிவராஜ் சிங் சவுகான்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 9:15 PM IST

போபால் (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி 230 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணும் பணியானது இன்று (டிசம்பர்.03) நடைபெற்று வருகிறது. இதில், 161 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும், காங்கிரஸ் 66 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மேலும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் வெற்றியைப் பெற்றுள்ளது.

2023 சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தின் பாஜக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான் ஆவார்.

சிவ்ராஜ் சிங் சவுகான் திட்டங்கள்: மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த போது கான் கி பேட்டி யோஜனா, ஜனனி சுரக்ஸா ஏனம் ஜனனி பிரசாவ் யோஜனா, ஸ்வகதம் லக்ஷ்மி யோஜனா, உஷா கிரன் யோஜனா, தேஜஸ்வினி, ஒன் ஸ்டாப் கிரிசிஸ் சென்டர், லாடோ அபிவான், போன்ற முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தினார். நர்மதை ஆற்றின் மீதான அலாதி பிரியம் காரணமாக அதன் சூழலைக் காப்பாற்றப் பல முயற்சிகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சிவ்ராஜ் சிங் சவுகான்:

  • 1975ஆம் ஆண்டு தனது 16 வயதில் மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 1977ஆம் ஆண்டு ஸ்வயம்ஸேவாக் ஆர்எஸ்எஸ் அமைப்புகளில் தொண்டராகவும் அதன் பின் போபால் அகில பாரதியா வித்யாரதி பரிஷத் ஒருங்கிணைப்பு செயலாளராகவும் இருந்துள்ளார்.
  • 1978 முதல் 1984 வரை மத்திய பிரதேசத்தின் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் மஹாகோஷல் பிராண்ட் இணை செயலாளராகவும், பொதுச்செயலாளராகவும் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
  • 1984ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்திலுள்ள பாரதீய ஜனதா யுவா மோர்சா அமைப்பின் இணை செயலாளராக இருந்துள்ளார்.
  • 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்திலுள்ள பாரதீய ஜனதா யுவா மோர்சா தலைவரானார்.
  • 1990ஆம் ஆண்டு தனது 31 வயதில் புத்னி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1991ஆம் ஆண்டு விதிஷா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து வாஜ்பாய் ராஜினாமா செய்த போது அந்த தொகுதியின் இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1996ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக நின்று வெற்றி பெற்றார்.
  • 2004ஆம் ஆண்டு 5வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 2005ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் அதே வருடம் நவம்பர் 29ஆம் தேதி மாநிலத்தின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 2006ஆம் ஆண்டு புத்னி தொகுதியில் சட்டமன்ற இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.
  • 2008ஆம் ஆண்டு மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சரானார்.
  • 2013ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதலமைச்சராக பணியாற்றினார்.
  • 2018ஆம் ஆண்டு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து மீண்டும் நான்காவது முறையாக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது, ஐந்தாவது முறையாக மத்தியப் பிரதேச முதலமைச்சராக பா.ஜ.க சார்பாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்படுவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் - சித்தாந்தத்திற்கான போர் தொடரும்" - ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.