இந்தியாவில் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்று லுலு மால். அதன் உரிமையாளர் யூசப் அலி, தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் இன்று (ஏப்ரல் 11) பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவசர அவசரமாக ஹெலிகாப்டர், பனங்காட்டில் உள்ள கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் பல்கலைக்கழகம் வளாகம் அருகே தரையில் இறக்கப்பட்டது.
இந்த விபத்தில் விமானி உட்பட 5 பயணிகளும், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தற்போது, அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சக்தி வாய்ந்த ஆயுதங்களை உபயோகித்த மியான்மர் ராணுவம்: 80 பேர் உயிரிழப்பு