உத்தரப்பிரதேசம்: கடந்த 2020ஆம் ஆண்டு செப்., மாதம் 14ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பெண்ணை அவரது வீட்டருகில் நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லி சஃடர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை அரசு சிபிஐக்கு மாற்றியது. சிபிஐ இந்த வழக்கை தனிக்குழு அமைத்து விசாரித்த பின்னர், 2020ஆம் ஆண்டு டிசம்பரில் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட நான்கு நபர்களான சந்தீப், லவ் குஷ், ரவி, ராம் ஆகியோர் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 4 பேரில் பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ், சந்தீப் என்ற நபரை குற்றவாளி என தீர்ப்பளித்து, மற்ற மூன்று நபர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இந்த தீர்ப்பு திருப்தி அளிக்காததால் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளனர். மேலும் தங்களது மகளின் இறுதிச் சடங்கை விரைவில் நடத்துமாறு போலீசார் அவசரப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றுமா காங்கிரஸ்? திமோக கட்சி தலைவருடன் ரகசிய பேச்சுவார்த்தை!