ETV Bharat / bharat

விபத்தில் பெற்றோரை இழந்த 7 மகள்கள்; க்ரவுட் ஃபண்டிங் மூலம் கிடைத்த ரூ.1 கோடி

ராஜஸ்தானில் விபத்தில் பெற்றோரை இழந்த 7 மகள்களுக்கு க்ரவுட் ஃபண்டிங் மூலமாக 1 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

விபத்தில் பெற்றோரை இழந்த 7 மகள்கள்; க்ரவுட் ஃபண்டிங்  மூலம் கிடைத்த 1 கோடி

author img

By

Published : Nov 18, 2022, 10:54 PM IST

பார்மர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த நிலையில், வீட்டில் உள்ள 7 மகள்களை ஊர்மக்கள் ஒன்று கூடி பார்த்துக்கொள்வதாக உறுதியளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிந்தாரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ கார் ஒன்று சாலையில் சென்ற சிலரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கெத்தா ராம் என்பவர் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் 4 வயது மகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவனும் உயிரிழந்தான்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் லோக்பந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் வீட்டிற்குச்சென்று வீட்டில் இருந்த 7 மகள்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதியளித்தார்.

பின்னர் பேசிய அவர், “இந்த விபத்துக்குப் பிறகு, சமூக சேவகர்கள் மூலம் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டு, இதன் காரணமாக தற்போது நாடு முழுவதிலிருந்தும் பலர் இந்த குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

க்ரவுட் ஃபண்டிங் மூலம் இதுவரை ஒரு கோடிக்கும் மேல் பணம் கிடைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வங்கிக் கணக்கில் க்ரவுட் ஃபண்டிங் மூலம் பெறப்பட்ட தொகையைப் பாதுகாக்க, வங்கி அலுவலர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் எஃப்.டி-களை சிறுமிகளின் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் மகள்களையும், வந்த பணத்தையும் பார்த்துக் கொள்வோம் என உறுதியளித்துள்ளனர். பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு ஊர்மக்கள் முன்வந்து உதவி செய்யும் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.