ETV Bharat / bharat

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு... பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் பயணம்... - Prime Minister Narendra Modi on SCO summit

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சென்றுள்ளார்.

பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் பயணம்
பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் பயணம்
author img

By

Published : Sep 15, 2022, 4:20 PM IST

டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் புறப்பட்டுள்ளார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட முக்கிய உலக தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த பயணத்திற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் சமர்கண்டிற்கு செல்கிறேன்.

இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விரிவாக்கம், பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்வதை எதிர்நோக்குகிறேன்.

உஸ்பெக் தலைமையின் கீழ், வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. சமர்கண்டில் ஜனாதிபதி மிர்சியோயேவை சந்திக்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியா தற்சார்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.