ஹைதராபாத்: கடந்த ஜூன் மாதம் சீக்கிய சுதந்திரவாதி படுகொலை செய்யப்பட்டதையடுத்து கனடா மற்றும் இந்தியா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசு முகவருக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளை தனது நாடு விசாரித்து வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய நிலையில், அந்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீக்கிய சுதந்திர இயக்கத்திற்கு எதிராக கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக இந்தியா கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால், கனடா யுகே உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள கணிசமான சீக்கிய புலம்பெயர் மக்கள், அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில், காலிஸ்தான் தலைவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கனடா மற்றும் இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்தியா - கனடா உறவு: 2021 கணக்கெடுப்பின்படி கனடா நாட்டின் மொத்த மக்கள்தொகையான 3.7 சதவீதத்தில் இந்திய இன மற்றும் கலாச்சார வம்சாவளியினர் 1.4 மில்லியன் மக்கள் கனடாவை தங்கள் வீடாக கொண்டுள்ளனர்.
கனடாவின் 2 சதவீத மக்கள் தொகையில் 7,70,000 மக்கள் சீக்கியத்தை தங்கள் மனமாக அறிவித்துள்ளனர். மேலும், 2019 ஆம் ஆண்டு அரசு ஏப்ரல் மாதத்தை சீக்கிய பாரம்பரிய மாதமாக அறிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் ஏப்ரல் மாத நிலவரப்படி, 1.425 பில்லியன் மக்களுடன் இந்தியா, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. வடமாநிலமான பஞ்சாப்பில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், உலகின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவீதம் மட்டுமே அவர்கள் உள்ளனர்.
வர்த்தகம்: 2022ஆம் ஆண்டு 13.7 பில்லியன் டாலருக்கும் அதிகமான வர்த்தகத்துடன் கனடாவின் 10வது பெரிய இருவழி வணிகப் பங்குதாரராக இந்தியா இருந்ததாக கனடாவின் உலக விவகார செய்தி தொடர்பாளர் ஜீன்-பியர் ஜே.காட்போட் கூறினார்.
ஆனால் ஜி20 கூட்டத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் கனட பிரதமர் ட்ரூடோ இடையேயான சந்திப்பில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டு, இந்தியா உடனான திட்டமிடப்பட்ட வர்த்தக பணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணம்: கனடா - இந்தியா இடையேயான பயண விபரம் குறித்து பார்க்கையில், 2021ஆம் ஆண்டு கனடாவை சுற்றிப்பார்க்க வந்த அதிகப்படியான குழுக்களுல் இந்திய சுற்றுலாப் பயணிகளே 3.4 பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளனர். அதே ஆண்டு கனடாவில் இருந்து இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகள் செலவு 93 மில்லியன் டாலர்களாக உள்ளது.
முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்தில் ஒரு வாரத்துக்கு 35 விமானங்கள் என கட்டுப்பாடுகள் இருந்து வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உடன்பாட்டில் இரு நாடுகளுக்கும் இடையேயான விமானங்களின் எண்ணிக்கை மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
2022ஆம் ஆண்டின் இறுதியில் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா தரவுகளின்படி கனடாவில் உள்ள 8,00,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களில் 40 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையால் கனடா இந்தியா இடையே சர்ச்சைகள் பெருகி வருகிறது.