புதுடெல்லி: கடந்த 2018ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி மற்றும் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கே.டி. சங்கரன், பேராசிரியர். ஆனந்த் பாலிவால், பேராசிரியர். டி.பி. வர்மா, பேராசிரியர் (டாக்டர்) ராகா ஆர்யா மற்றும் ஸ்ரீ எம். கருணாநிதி ஆகியோரை நியமிப்பதில் மத்திய அரசு மகிழ்ச்சியடைகிறது " என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்ட ஹைபிரிட் பயங்கரவாதிகள் கைது