ETV Bharat / bharat

தனிமையை விரும்புபவரா நீங்கள்?.. ஜாக்கிரதை...! இத முதல்ல படிங்க! - நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்க்கான ஆபத்தை உணவு, உடற்பயிற்சி, புகைபிடித்தல் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைக் காட்டிலும் தனிமையே அதிக அளவு உருவாக்குகிறது என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனிமை இருதய நோய்க்கான அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறியுள்ளன

author img

By

Published : Jul 2, 2023, 10:42 PM IST

ஐதராபாத் : தனிமை, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய்க்கான அதிக ஆபத்தை உருவாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். பொதுவாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு, இதய தசை நோய், உயர்ரத்த அழுத்தம் போன்ற அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இத்தகைய அபாயத்தை அதிகரிக்கும் காரணியாக சரிவிகித உணவின்மை, சீரற்ற உடற்பயிற்சி, புகைப்பிடித்தல், மனச்சோர்வு ஆகியவை இருக்க, தனிமை அதற்கான அபாயத்தை பெருமளவு அதிகப்படுத்தும் என ஐரோப்பிய இருதயவியல் சங்கத்தின் (ESC) இதழான, ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து அமெரிக்க ஆய்வு ஆசிரியர் லு குய் கூறுகையில், "சமூக தொடர்பே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு அதிக வலிமையை சேர்க்கும். தனிமை காரணமாக உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளில் தவிப்போர் ஏராளம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு என்னுடைய முதல் பரிந்துரை சமூகத்துடன் இணைந்து பழகுவதும், பேசுவதும் மற்றும் நண்பர்கள் வட்டாரங்களை உருவாக்குவதுமே.

தனிமையில் இருப்பதும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவதும் இந்த காலகட்டத்தில் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு ஆய்வு ஒன்றில், கரோனா பாதிப்பின் போது அனைவரும் ஒருவரை விட்டு ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போதும் அதே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" எனக் கூறினார்.

மேலும் அவர், "தனிமை மற்றும் தனிமைப்படுத்துதல் இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டவை. தனிமை என்பது நமது சொந்த விருப்பம். தனிமைப்படுத்துதல் என்பது நாம் வாழும் சமூகம் சார்ந்தது. இயல்பாகவே மனிதர்கள் பிறக்கும் போதே சமூகத்தோடு இணைக்கப்பட்டவர்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்வதில் தொடங்கி, அனைத்திற்கும் சமூகத்தின் உதவி என்பது மனிதர்களுக்கு அவசியம்.

நண்பர்கள், உறவினர்கள், வேலையில் உடன் பணியாற்றுவோர், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் நமக்கே தெரியாமல் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிக பங்கு வகிக்கின்றனர்" எனக் கூறியுள்ளார். சில முந்தைய ஆய்வுகளில், தனிமையில் இருப்பவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்படும் நபர்களே அதிக அளவு இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது உண்மையா என்பதை கண்டறியும் வகையில், 37 வயதிலிருந்து 73 வயதிற்கு உட்பட்ட 18,509 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மற்றும் இருதய நோய் அற்றவர்களை கொண்டு தற்போதைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு கடந்த பத்து வருடங்களாக நடைபெற்ற நிலையில் ஆய்வின் முடிவில் 3,247 நபர்கள் இருதய நோயினால் இறந்துள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 2,771 நபர்கள் இதயத் தமனி நோயாலும், 701 நபர்கள் மாரடைப்பாலும் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக தனிமையில் இருந்த நபர்கள் 26% மற்றும் அவ்வப்போது தனிமையில் இருந்தவர்கள் 11% என இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் நபர்கள் சமூகத்துடன் எப்போது இணைந்து இருப்பது அவசியம் ஆகும்.

இதையும் படிங்க: தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் பயோ பேங்க்குகள்? - அமெரிக்க ஆராய்ச்சியாளர் கூறிய அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.