ETV Bharat / bharat

ஆகஸ்ட் 8ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்... ஆக.10 பிரதமர் மோடி விளக்கம் எனத் தகவல்! - no confidence motion means

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8ஆம் தேதி விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Modi
Modi
author img

By

Published : Aug 1, 2023, 2:06 PM IST

டெல்லி : மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8ஆம் தேதி விவாதம் நடைபெற உள்ளதாகவும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடங்கிய நிலையில் அது முதலே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி அதுகுறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முழுமையாக நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என ஏறத்தாழ 26 எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றன. இருப்பினும் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் என தெரிவிக்கப்பட்டது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்தன. கடந்த ஜூலை 26 ஆம் தேதி மக்களவையில் அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி. கவுரவு கோகாய், நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அதேபோல் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.பி. நம நாகேஸ்வர் ராவ்வும், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை வழங்கி இருந்தார். இரண்டு நோட்டிஸ்களையும் ஏற்றுக் கொண்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து கட்சி தலைவர்களுடனும் விவாதித்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசின் மீது விவாதம் நடத்துவதற்கான தேதியை அறிவிப்பதாக தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் உடனடியாக விவாதம் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடக்க உள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, ஆகஸ்ட் 8ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் மோடி மக்களவையில் விளக்கம் அளிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக நாடளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் நடத்தப்பட்டு ஆலோசனையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேலும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை உடனடியாக நடத்தக் கோரி நிலைக் குழுவை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 11ஆம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நிறைவு பெறும் நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் காரணமாக அலுவல் நாட்கள் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்து உள்ளன.

இதையும் படிங்க : டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு ராகுல் காந்தி திடீர் விஜயம்... வியாபாரி, பொது மக்களிடம் கலந்துரையாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.