ETV Bharat / bharat

நாடாளுமன்றம் டிச.11 வரை ஒத்திவைப்பு - மஹுவா பதவி நீக்கத்தை தொடர்ந்து அறிவிப்பு!

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரின் மக்களவையை டிசம்பர் 11ஆம் தேதி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 4:17 PM IST

டெல்லி : நடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ 19 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், தபால் நிலைய மசோதா, காஷ்மீர் இடஒதுக்கீடு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இன்று (டிச. 8) மக்களவை கூடிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் அதானி நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பணம் வாங்கியதாக, பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே புகார் எழுப்பினார்.

இது தொடர்பாக மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது.

மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர், மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கையை அவையில் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்தார்.

  • #WATCH | Cash for query matter | TMC's Mahua Moitra expelled as a Member of the Lok Sabha; House adjourned till 11th December.

    Speaker Om Birla says, "...This House accepts the conclusions of the Committee that MP Mahua Moitra's conduct was immoral and indecent as an MP. So, it… pic.twitter.com/mUTKqPVQsG

    — ANI (@ANI) December 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தொடர்ந்து தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையை அவை ஏற்றுக் கொள்வதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாகவும், அவையில் அவர் தொடர ஏற்புடையதல்ல என்றும் கூறினார். தொடர்ந்து அவையை டிசம்பர் 11ஆம் தேதி வரை சபாநாயக ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.