டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியின் உரையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இதையும் படிங்க: மக்களவையில் கேள்வி நேரம் இடம்பெறவில்லை!