திருவனந்தபுரம்: கேரளத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் வி.பாஸ்கரன் கூறியுள்ளார்.
அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 8ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி இரண்டாம் கட்ட தேர்தல் 8ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் 10ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 14ஆம் தேதி நடைபெறுகின்றது.
அந்த வகையில், மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றது. இரண்டாம் கட்ட தேர்தல், கோட்டயம், எர்ணாக்குளம், திரிச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மூன்றாம் கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கன்னூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் கோவிட்-19 தடுப்பு வழிகாட்டுதல் தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையர் வி.பாஸ்கரன் வெள்ளிக்கிழமை (நவ.6) தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “ஸ்டாப் த கவுண்ட்”- சீறும் டொனால்ட் ட்ரம்ப்