ETV Bharat / bharat

கர்நாடக மதபோதகரின் தற்கொலைக்கு காரணம் பழிவாங்கும் எண்ணம்தான்.. விசாரணையில் வெளிவந்த உண்மை - Basavalinga Sree

கர்நாடக மதபோதகரின் தற்கொலைக்கு அவரது உறவினரின் பழிவாங்கும் எண்ணம்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கர்நாடக மதபோதகரின் தற்கொலைக்கு காரணம் பழிவாங்கும் எண்ணம்தான்.. விசாரணையில் வெளிவந்த உண்மை

author img

By

Published : Oct 31, 2022, 10:36 AM IST

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் குஞ்சுகல் பண்டே மடத்தின் வளாகத்தில், பசவலிங்க ஸ்ரீ என்பவர் அக்டோபர் 24ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பொறியியல் மாணவர் உள்பட மூன்று பேரை முதற்கட்டமாக கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கன்னூரு மடத்தைச் சேர்ந்த முருத்யுனஜெயா சுவாமிஜி, தோடாபாலாப்பூரைச் சேர்ந்த நீலாம்பிகே அகா சந்தா மற்றும் துமக்குருவைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாதேவையா ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் முருத்யுனஜெயா சுவாமிஜி, தற்கொலை செய்து கொண்ட பசவலிங்க ஸ்ரீயின் உறவினர் ஆவார். சுவாமிஜி, கஞ்சுகல் படே மடத்தை நிர்வகித்து வந்தார். இங்குள்ள 80 ஏக்கர் நிலத்தில் அதிகளவிலான பக்தர்கள் இருந்தனர். மேலும் இதற்கு வரும் நிதியுதவி காரணமாக சில கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு கிடைக்கும் நிதிக்காக சித்தகங்கா மடத்தை சுவாமிஜி சார்ந்து இருந்துள்ளார். ஆனால், சித்தகங்கா மடம் சுவாமிஜியிம்,ன் கையை நழுவிச் செல்லும் நிலையில் இருந்துள்ளது. இதனால் தனது உறவினரான உயிரிழந்த பசவலிங்க ஸ்ரீக்கு எதிராக சுவாமிஜி திரும்பி உள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

எனவே சித்தகங்கா மடத்தை தன்வசம் கொண்டு வருவதற்காக, பசவலிங்க ஸ்ரீயின் மடத்தில் பணிபுரிந்து வந்த நீலாம்பிகேவை குருவியாக மாற்றி, பசவலிங்க ஸ்ரீயின் சில செயல்கள் மற்றும் ஆலோசனைகளை ரகசியமாக படம் பிடித்துள்ளார். இந்த காட்சிகள் மற்றும் ஆடியோக்கள் வழக்கறிஞர் மகாதேவையாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனை வழக்கறிஞர் எடிட் செய்து, பசவலிங்க ஸ்ரீக்கு எதிராக மாற்றி அமைத்துள்ளார். மேலும் இதனை பசவலிங்க ஸ்ரீயிடம் காண்பித்து அவரை பிளாக் மெயில் செய்து, ஹனி டிராப்பும் செய்துள்ளனர். இதனால் கடும் சித்ரவதைக்கு உள்ளான பசவலிங்க ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: தன்னைக் கடித்த பாம்பை கடித்து கொன்ற சிறுவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.