ETV Bharat / bharat

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் லேசான தடியடி - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீசார் லேசான தடியடி நடத்தியதால் சிறிது பதற்றம் ஏற்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் லேசான தடியடி
புத்தாண்டு கொண்டாட்டத்தில் லேசான தடியடி
author img

By

Published : Jan 1, 2023, 12:29 PM IST

புத்தாண்டு கொண்டாட்டத்தில் லேசான தடியடி

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புகழ்பெற்றது புதுச்சேரி. 2023 புத்தாண்டை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் நேற்றிரவு குவிந்தனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து விடுதிகளிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் சுற்றுலாப் பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத் தளமான கடற்கரை சாலையில் 25,000 பேர் கூடுவார்கள் என போலீசார் கணித்தனர். ஆனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியதால் போலீசார் திணற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகினர்.

கடற்கரை சாலையில் நிர்ணயத்தை இடத்தை விட கூடுதலாக மக்கள் வந்ததால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரின் தடையை மீறி வந்தவர்கள் தடியடி நடத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல் கடற்கரை சாலையில் கட்டுப்பாடு இல்லாமல் கூட்டம் அலைமோதியதால், அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த இளைஞர்கள் விசில் அடித்தும் கோஷமிட்டும் பாட்டு போட கேட்டனர்.

ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

இருப்பினும் யாரும் கடற்கரை சாலை விட்டு செல்லாமல் 12 மணி வரை புத்தாண்டுக்காக காத்திருந்தனர். 12 மணிக்கு சுற்றுலாத்துறை சார்பில் வானவேடிக்கை விடப்பட்டது. புத்தாண்டு பிறந்ததும் கடற்கரையில் குடியிருந்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். 15 நிமிடங்களில் அனைவரையும் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினார்கள். கலையாதவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

12:30 மணிக்கெல்லாம் கடற்கரை சாலை வெறிச்சோடிது. இந்த முறை அதிக அளவில் மக்கள் கூடினாலும் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது ஏமாற்றமாக இருந்தது. இதேபோல் கடற்கரையை ஒட்டி உள்ள சுற்றுலா பொழுதுபோக்கு மையங்களில் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர்.

இதையும் படிங்க: வீடியோ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.