ஒரு காலத்தில் உழவர்களின் நண்பனாகத் திகழ்ந்த சிட்டுக் குருவிகள், வீடுகளின் மேற்கூரைகளிலும், ஓலைக்குடிசைகளிலும் குடும்பத்தில் ஒரு அங்கம்போல வாழ்ந்துவந்தவை. காலையில் எழும்போதே சிட்டுக்குருவிகளின் ஒலி கேட்பவரின் காதுகளையும் மட்டுமல்ல; மனத்தையும் மயக்கவல்லது.
இந்தக் காலத்தில் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான கதிர்வீச்சுகளால் முற்றிலும் அழியும் நிலையை சிட்டுக்குருவிகள் சந்தித்துள்ளன. வயல்களில் பூச்சிமருந்து அதிகம் தெளிக்கப்படுவதால் பூச்சிப்புழுக்களை உணவாக உண்ணும் சிட்டுகளுக்கு தற்போதைய காலத்தில் உணவு கிடைப்பதில்லை.
எனவே அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பதற்காக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி நாள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
இன்றைய நாள் சர்வதேச 'மகிழ்ச்சி' நாளாகவும் 'உலக சிட்டுக் குருவி' நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ராஜ் நிவாஸில் மரக்கன்று நட்டு குருவிக் கூண்டை மரத்தில் பொருத்தினார். துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திராமௌலி, மகேஸ்வரி பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சென்னைக்கு வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?