போபால் (மத்தியப் பிரதேசம்): 2021ஆம் ஆண்டு கரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்து, அண்மையில் நடந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் 99.8% மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்தார் சிறுமி வனிஷா பதக். இவர் தாய்வழி மாமாவான பேராசிரியர் அசோக் சர்மாவின் பராமரிப்பில் இருக்கிறார்.
இவரது தந்தை ஜீதேந்திர பதக் எல்ஐசி முகவராக இருந்தவர். அப்போது எல்ஐசியில் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் வட்டியும் முதலுமாக ரூ. 29 லட்சத்தை எட்டியுள்ளது. இதனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று எல்ஐசி சிறுமிக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
அது மட்டுமில்லாமல், எல்ஐசியில் ஜீதேந்திர பதக்கின் சேமிப்பையும், மாதந்தோறும் அவருக்குக் கிடைக்கும் கமிஷன்களையும் எல்ஐசி முடக்கியுள்ளது. இறுதியாக சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்’ என்று நோட்டீஸ் வந்துள்ளது.
ஆனால், 10ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ள நிலையில், தந்தையின் கடைனை எவ்வாறு செலுத்துவது என்று எனக்கு தெரியவில்லை என்று தன்னுடைய நிலையினை விளக்கி எல்ஐசி அலுவலகத்தில் பலமுறை சிறுமி கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு எல்ஐசி தரப்பில் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
இது தொடர்பான செய்திகள் வெளியாகவே, இதையறிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, சிறுமியின் கடன் விவகாரம் குறித்த தற்போதைய நிலை என்ன..? என்று எல்ஐசி நிறுவனமும், நிதியைமைச்சகமும் விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐ.பி.ஓ. வெளியீட்டுக்கு அனுமதி