மேற்கு வங்க மாநிலத்தில் வேலை வாய்ப்பை உறுதி செய்யவும், புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வரவும் வலியுறுத்தி இடதுசாரி மாணவர்களும், இளைஞர்களும் ஊர்வலம் சென்றனர். கல்லூரி சாலையில் தொடங்கிய ஊர்வலமானது, எஸ்ப்ளேனேட் பகுதியில் எஸ்என் பானர்ஜி சாலையில் மெட்டல் தடுப்புகள் வைக்கப்பட்டு காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஊர்வலத்தின்போது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாணவர்கள் தடுப்பைத் தாண்டி முன்னேற முயன்றதால், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனத்தின் உதவியை முதலில் நாடினர்.
இருப்பினும், இடதுசாரி ஆர்வலர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் போலீஸ் தாக்குதலில், சிலருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல், ஒரு காவல் துறை அலுவலரும் காயமடைந்தார். இந்த வன்முறை சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தனியாக சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு: 5 பேர் கைது