திருவனந்தபுரம்: கேரள அரசில் இன்று(டிச.24) காலை ஜனநாயக கேரள காங்கிரஸ் கட்சியின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஆண்டனி ராஜூ மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் துறைமுக அமைச்சராக இருந்த அகமது தேவர் கோவில் ஆகியோர் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம், தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எல்டிஎப் (LDF) அமைப்பாளர் ஜெயராஜன், “2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து புதிய அமைச்சர்கள் வரும் டிச.29ஆம் தேதி பதவி ஏற்பார்கள் எனவும், அவரது இலாக்காக்கள் முதலமைச்சரால் முடிவு செய்யப்படும் எனவும், இது கேரளாவில் ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி கட்சியின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், காங்கிரஸ் எஸ் (S) பிரிவைச் சார்ந்த ராமசந்திரன் கண்டனப்பள்ளி மற்றும் கேரள காங்கிரஸ் பி (B) பிரிவைச் சார்ந்த கே.பி.கனேஷ்குமார் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதிவி ஏற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜூ, “நான் நவம்பரில் ராஜினாமா செய்ய தயாராக இருந்தேன். ஆனால், நவ கேரள சதாஸ் காரணமாக முதலமைச்சர் என்னை கூடுதலாக பதவி வகிக்க சொன்னார். அதனால் நான் ராஜினாமா செய்ய தாமதமாகி விட்டது” என்றார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தேவர்கோவில்,“ கடந்த இரண்டரை வருடமாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தது மகிழ்ச்சியடைவதாகவும், போக்குவரத்து துறை கேஎஸ்ஆர்டிசி (KSRTC) ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளத்தினை அளித்த பின் ராஜினாமா செய்வது திருப்தி அளிக்கிறது” என்றார்.
முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் கேரள சட்டமன்றத் தேர்தலில், ஜனநாயக இடது முன்னணி கட்சி 2வது முறையாக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்தது. அப்போது நான்கு கட்சிகளுக்கு ஒற்றை எம்எல்ஏ என காலப்பகிர்வு அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
அமைச்சரவையில் 21 உறுப்பினர்களாகக் கட்டுபடுத்தும் அரசியலமைப்பு ஷரத்துகளை மேற்கொள் காட்டி, பதவிக்காலத்தை பகிர்ந்து கொள்ள எல்டிஎப் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் இரண்டு அமைச்சர்கள் தற்போது ராஜினாமா செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய இந்திய மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட்.. விளையாட்டுத்துறை அமைச்சகம் கூறுவது என்ன?