நாட்டின் தலைநகர் டெல்லியில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லைக்கும் இடையில் குழுமியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, சீக்கிய மதத்தவர்களின் வழிபாட்டு இடங்களான 'குருத்வாரா'விலிருந்து லங்கர் எனப்படும் உணவு பரிமாறப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் அமர்ந்து உண்டனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள், டெல்லி - நொய்டா இணைப்புச்சாலையில் உள்ள 'கெளதம் புத் தவார்' என்னும் இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
பொதுவாக, சீக்கியர்கள் வழிபடும் இடங்கள் 'குருத்வாரா' என அழைக்கப்படுகின்றன. இங்குள்ள சமையல் கூடங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை 'லங்கர்' என்னும் பஞ்சாபி மொழியில் சீக்கியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த 'லங்கர்' உணவு சாதி, மத, பேதமில்லாமல் அனைவருக்கும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: 3:45 மணி நேர பேச்சுவார்த்தை... தேநீரைகூட அருந்தாத விவசாயிகள்: நடந்தது என்ன?