இமாச்சல் பிரதேசம்: லஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திலுள்ள நல்டா அருகே பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால், செனாப் ஆற்றின் ஓட்டம் தடைபட்டுள்ளது.
ஆற்றில் மண்சரிந்து ஏற்பட்டுள்ள அடைப்பால், அருகிலுள்ள கிராமங்களில் தண்ணீர் புகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆற்றின் சில கரைகள் நீரில் மூழ்கியுள்ளன.
"ஆற்றில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும், 10-15 விழுக்காடு நீர் செல்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்துள்ளோம். அருகிலுள்ள கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றிவருகிறோம்.
மேலும், வான்வழி ஆய்வுக்காக ஒரு ஹெலிகாப்டரும் வரவழைக்கப்படவுள்ளது" என அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு அருகிலுள்ள கிராம மக்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களையும் மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளோம் என அம்மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நூலிழையில் உயிர் பிழைத்த நபர்: திக்... திக்... காணொலி!