பிகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தனது 74ஆவது பிறந்த நாளை இன்று (ஜூன்.11) கொண்டாடினார். மாட்டுத் தீவன ஊழலில் தண்டனைக்குள்ளான லாலு பிரசாத், ஜார்கண்ட் சிறையில் இருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் அவருக்கு பிணை கிடைத்தது.
இந்நிலையில், தனது மகள் மிசா பாரதி வீட்டில் லாலு பிரசாத் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். லாலு பிரசாத் அவரது மனைவி ராப்ரி தேவியும் அவரது பேரக்குழந்தைகளும் உடனிருந்தனர். இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் மிசா பாரதி பகிர்ந்துள்ளார்.
அவசர நிலையை எதிர்த்து போராடிய ’லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயன் இயக்கத்திலிருந்து பொது வாழ்விற்குள் களம் கண்ட லாலு யாதவ், பின்னர் பிகார் முதலமைச்சராக உருவெடுத்தார். ஊழல் புகாரில் சிக்கிய காலத்தில் தனது மனைவியை முதலமைச்சராக்கிய லாலு, ஐக்கிய முற்போக்கு அரசின் ஆட்சிக் காலத்தில் ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவிலிருந்து விலகி 'தாய் கட்சி' திருணமூல் திரும்பிய முகுல் ராய்