ஜார்க்கண்ட் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கு, ஜனவரி 22ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று மிகவும் மோசமடைந்தது. இதனார், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது அவரது உடல்நலம் சீராக உள்ளது; சுவாசிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இதய நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட லாலு, தற்போது தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதயநோய் நிபுணரும், மருத்துவருமான ராகேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:லாலு பிரசாத் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!