டெல்லி : டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவை அவரது டெல்லி இல்லத்தில் சந்தித்த லாலு பிரசாத் யாதவ் அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்புக்கு பின் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், “அவர் விரைவில் குணமடைவார். அவர் என்னை விட மூத்தத் தலைவர் மற்றும் மிகவும் பழைய நண்பர். சரத் யாதவ் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் இப்போது நன்றாக இருக்கிறார்.” என்றார்.
மேலும், “சரத் யாதவ் நாடாளுமன்றத்தில் இல்லை. இது அனைவராலும் உணரப்படுகிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர் அரசாங்கத்தை உறுதியாக எதிர்கொண்டார். நான் மீண்டும் ஜனதா பரிவாரை இணைக்க முயற்சிக்கிறேன். நேற்று, நான் முலாயம் சிங் யாதவையும் சந்தித்தேன்.
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் விசாரணை நடக்க வேண்டும். பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு ஜனதா பரிவாரில் இடமில்லை” என்றார்.
தொடர்ந்து லோக் ஜனசக்தி கட்சியின் முறிவு குறித்து கூறுகையில், “சிராக் பாஸ்வான் ஒரு பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார்” என்று லாலு கூறினார்.
இதையும் படிங்க : வீட்டை கோவிட் சிகிச்சை மையமாக மாற்றிய லாலு வாரிசுகள்!