ETV Bharat / bharat

லால் பகதூர் சாஸ்திரி 117ஆவது பிறந்த நாள்; பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை! - Lal Bahadur Shastri's life

மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Narendra modi
Narendra modi
author img

By

Published : Oct 2, 2021, 10:07 AM IST

டெல்லி : மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 117ஆவது பிறந்த நாள் இன்று (அக்.2) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி விஜய் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினேன். கொள்கை, மதிப்பை அடிப்படையாக கொண்ட அவரது வாழ்வு நாட்டு மக்களுக்கு உத்வேகம் கொடுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Lal Bahadur Shastri
லால் பகதூர் சாஸ்திரி 117ஆவது பிறந்த நாள்; பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை!

லால் பகதூர் சாஸ்திரி 1904 அக்டோபர் 2 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள முகல்சாராய் மாவட்டத்தில் பிறந்தார். மகாத்மா காந்தியடிகளுடன் பிறந்த நாளை பகிர்ந்துகொள்ளும் சாஸ்திரி, தனது இளம் வயதிலேயே சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கு சென்றவர். 1947இல் நாடு சுதந்திரம் அடைந்தபோது சாஸ்திரி போலீஸ் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் 1964ஆம் ஆண்டு முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைவுக்கு பின்னர் பிரதமர் ஆனார். இவரின் ஆட்சிக் காலத்தில் 1965இல் போருக்கு வந்த பாகிஸ்தானை இந்தியா வென்றது. இன்றளவும் அரசியல் கட்சித் தலைவர்கள் கோஷமிடும் நாட்டின் புகழ்பெற்ற ஜெய் ஜவான், ஜெய் கிஷான் (ராணுவ வீரன், விவசாயி வாழ்க) முழக்கம் இவரது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டது. இவர் ஜனவரி 11,1966 மாரடைப்பால் காலமானார்.

இதையும் படிங்க : அண்ணல் காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.