ETV Bharat / bharat

லக்கிம்பூர் வன்முறை; யார் யார் குற்றவாளிகள்? உச்ச நீதிமன்றம் கேள்வி! - விசாரணை

லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகள், யார் மீதெல்லாம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை உறுதிசெய்ய வேண்டும் எனவும் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

Lakhimpur Kheri Violence
Lakhimpur Kheri Violence
author img

By

Published : Oct 7, 2021, 12:43 PM IST

டெல்லி : உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) நடந்த வன்முறை சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அமைச்சர் ஒருவரின் மகன் காரை ஏற்றியதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், லக்கிம்பூர் கேரி வன்முறை துரதிருஷ்டவசமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும். வழக்கின் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (அக்.8) தள்ளிவைத்தது.

Lakhimpur Kheri Violence: Will File Status Report by Tomorrow, UP Govt Tells SC After Forming Probe Panel
உச்ச நீதிமன்றம்

முன்னதாக இந்த வழக்கில் நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நாளை (அக்.8) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, லக்கிம்பூர் கேரி விவகாரம் அரசியல் ரீதியாக நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதி விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த நேற்று (அக்.6) ஆறுதல் கூறினார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : லக்கிம்பூர் வன்முறை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.