ETV Bharat / bharat

கரோனா: கும்பமேளாவை அதிக பக்தர்களின்றி முடித்துக்கொள்ள பிரதமர் வேண்டுகோள்

author img

By

Published : Apr 17, 2021, 12:13 PM IST

டெல்லி: கரோனா பாதிப்பு அதிகரிப்பதால், கும்பமேளாவை அதிக பக்தர்களின்றி முடித்துக்கொள்ள பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Kumbh Mela
மோடி வலியுறுத்தல்

ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்துக்களின் புனிதமான நாள்களில் ஹரித்துவார் கங்கை ஆற்றில் புனித நீராடினால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில், இந்தாண்டு தொடங்கிய கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

30 சாதுக்களுக்கு இதுவரை கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலானோர் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் தொடர்ந்து இங்கு நீராடிவருகின்றனர்.

இந்நிலையில், கும்பமேளாவில் குறைந்த அளவிலான பக்தர்களே பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சாமி அவ்தேஷானந்த் கிரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சாதுக்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நிர்வாகத்துடனான அவரது ஒத்துழைப்புக்கு நன்றி. கரோனா அதிகரிப்பதால் கும்பமேளாவை அதிக பக்தர்களின்றி முடித்துக்கொள்ள பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கும்பமேளா ஏன் இன்னும் நிறுத்தப்படவில்லை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.