பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இரண்டு நாள்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மூன்று உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகளால் உற்சாகமடைந்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை (செப்.7) டெல்லிக்குச் சென்றார்.
யார் யாருக்கு பதவி
டெல்லியில் கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. புதன்கிழமை (செப்.8) இரவு பெங்களூரு திரும்புகிறார்.
இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவலில், “மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளார் என்று கூறியிருந்தாலும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து உயர் மட்ட கட்சித் தலைவர்களுடன் பசவராஜ் விவாதிக்கப் போவதை கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
பொம்மை தனது கடைசி டில்லி பயணத்தின் போது நட்டாவை சந்திக்க முடியவில்லை, இந்த முறை நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இதற்கிடையில் பசவராஜ் பொம்மை தனது அமைச்சரவையில் காலியாகவுள்ள நான்கு இடங்களுக்கு யார் யாரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
எடியூரப்பா மகனுக்கு பதவி
இந்நிலையில் எடியூரப்பாவின் மகனுக்கு அமைச்சரவையில் பதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு நடக்கும்பட்சத்தில் எடியூரப்பா ஆதரவாளர்கள், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பின்னால் செல்லக் கூடும்.
ஆகையால் இதைத் தடுக்க வேண்டும் என்றும் என்ற குரல்களும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையில் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “மாநிலத்தில் கட்சி அமைப்பு மற்றும் கட்சியை வலுப்படுத்தும் எதிர்கால உத்திகள் குறித்து பொம்மை விவாதிப்பார்” என்றன.
இதையும் படிங்க : அமைச்சரவையில் குழப்பம் - எடியூரப்பாவைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர் பொம்மை