புவனேஸ்வர் (ஒடிசா): ஒடிசா மாநிலம் கோனார்க் நகரில் 31ஆவது பாரம்பரிய நடனங்கள் அடங்கிய கோனார்க் திருவிழா, சர்வதேச மணல் சிற்ப திருவிழா இன்று (டிச.1) தொடங்கியது.
இந்த இரட்டை நிகழ்ச்சியில் நாடு முழுவதிலிருந்தும் சுமார் 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
சூரியக் கோயிலில் மாலை நேரத்தில் நடைபெறும் கோனார்க் விழாவில் இந்திய கலாசாரத்தை பறைச்சாற்றும் வகையில் பரதநாட்டியம், குச்சிப்புடி, ஒடிசி, மணிப்புரி, கதக்களி உள்ளிட்ட நடனங்கள் அரங்கேறும்.
அதேபோல், பார்வையாளர்களை கவரும் வகையிலான மணல் சிற்பங்களும் இதில் இடம்பெறும். அம்மாநில சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த விழாவானது வரும் டிசம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும்.
கரோனா காலத்தில் நடைபெறும் விழா என்பதால், கரோனா தடுப்புப் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கோயில் பிரசாதத்தை ஆன்லைனில் விற்ற அமேசான் மீது வழக்கு