திருவனந்தபுரம்: கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் வரதட்சணைக் கொடுமை அதிகரித்துவருகிறது. ஒருபுறம் படித்த பெண்களே வரதட்சணை கொடுமைகளுக்கு உள்ளாகி தற்கொலை முடிவுக்கு செல்வதும், மறுபுறம் மணமுடித்து வந்த இளம்பெண்களை கணவர் குடும்பத்தார் தற்கொலைக்குத் தூண்டி உயிரைக் காவு வாங்குவதும் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சூரஜ் என்பவர், தனது மனைவி உத்ராவை பாம்பைப் பயன்படுத்தி கொலைசெய்ததாக 2020ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். முதல்கட்ட விசாரணையில், சூரஜ் திருமணத்திற்காக 100 பவுன் நகை, கார் உள்ளிட்டவை வரதட்சணையாக பெற்றதும்.
இருப்பினும் கூடுதல் வரதட்சணைக் கேட்டு உத்ராவை துன்புறுத்திவந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், திட்டமிட்டு பாம்பை பயன்படுத்தி உத்ராவைக் கொலை செய்து, விபத்து என நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் இன்று கொல்லம் நீதிமன்றம், சூரஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் அக்.13ஆம் தேதி தெரிவிக்கப்படஉள்ளது.
இதையும் படிங்க: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவரிடம் தீவிர விசாரணை!