கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள முகுந்தபுரத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கானா என்ற நாட்டைச்சேர்ந்த எச்ஐவி பாதிக்கப்பட்ட 51 வயது நோயாளி ஒருவர் சிறுநீரக சிகிச்சைக்காக வந்திருந்தார். அவரைப் பரிசோதித்ததில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் அவருக்கு சிறுநீரக தானம் அளிக்க அவரின் சகோதரர் முன்வந்தார்.
இருப்பினும் இருவரின் ரத்த வகைகளும் மாறுபட்டிருந்தன. இது குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு கடந்த மாதம் அக்-27 அன்று அந்நோயாளிக்கு வெற்றிகரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அந்நபர் நலமாக இருப்பதாகவும், இடுப்புப் பகுதியில் லேசான வலி உள்ளதாகவும் அந்த மருத்துவமனையின் சிறுநீரக சிறப்பு மருத்துவர் பிரதீக் தாஸ் கூறினார். இந்நிலையில் சிகிச்சைப் பெற்ற வெளிநாட்டவரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க:நேற்று ’ரெட் லைட் ஏரியா’வின் மகள்; இன்று NHRC குழுவில் உறுப்பினர்