ETV Bharat / bharat

கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி திருமண பரிசு.. நடிகர் சுனில் ஷெட்டி விளக்கம் - maharastra news

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - நடிகை அதியா ஷெட்டி திருமணத்துக்கு விலையுயர்ந்த பைக், கார் உள்ளிட்ட பொருட்கள் விவகாரத்தில் நடிகர் சுனில் ஷெட்டி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சுனில் ஷெட்டி
சுனில் ஷெட்டி
author img

By

Published : Jan 27, 2023, 11:22 AM IST

Updated : Jan 31, 2023, 5:17 PM IST

காந்தாலா: கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - நடிகை அதியா ஷெட்டியின் திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் காந்தாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பார்ம் ஹவுஸில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டி - கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் திருமண விருந்தில் கலந்து கொண்ட திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் விலையுயர்ந்த பொருட்களை திருமண பரிசாக வழங்கியதாக கூறப்பட்டது.

குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் விலை உயர்ந்த கார் மற்றும் பைக் என ராகுல் - அதியா ஜோடிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருமண பரிசாக கிடைத்ததாக சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.

இந்நிலையில் அதற்கு நடிகர் சுனில் ஷெட்டியின் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். "தம்பதிக்கு திருமண பரிசாக கிடைத்ததாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அதியா ஷெட்டி - கே.எல் ராகுல் தம்பதிக்கான பரிசுகள் பற்றி வெளியான தகவல்கள் அனைத்து உண்மை இல்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களை பொது களத்தில் வெளியிடும் முன் எங்களுடன் விவரங்களை உறுதிப்படுத்துமாறு பத்திரிகை சகோதரத்துவத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமண புகைப்படங்கள்!

Last Updated : Jan 31, 2023, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.