இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ளது கஜ்ரானா விநாயகர் கோயில். தினமும் இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயில் வளாகத்தில் உள்ள பிரசாத விற்பனை கடை ஏலம் விடப்பட்டது.
இந்தூர் மேம்பாட்டு ஆணையம் ஏலத்தை நடத்திய நிலையில், வியாபாரி தேவேந்திர தாகூர், ஒரு கோடியே 72 லட்ச ரூபாய்க்கு 30 ஆண்டுகளுக்கு ஏலம் எடுத்துள்ளார். கடையின் ஒரு சதுர அடியின் விலை இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏலம் எடுத்துள்ள கடைக்கு 'ஸ்ரீ அஷ்டவிநாயக்' எனப் பெயர் சூட்டியுள்ள தேவேந்திர தாகூர், ஒட்டு மொத்த ஏலத் தொகையையும் ஒரே மாதத்தில் செலுத்தியுள்ளார். கோயில் வளாகத்தில் பல ஆண்டுகளாக லட்டு பிரசாதம் விற்பனை செய்து வருவதாகவும், விநாயகர் அருளால் கடையை ஏலம் எடுத்துள்ளதாகவும் வியாபாரி தேவேந்திர தாகூர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தூரில் 6 வயது சிறுவன் கடத்திக் கொலை - ரூ.4 கோடி பணம் கேட்டு மிரட்டியது யார்?