ETV Bharat / bharat

ராகுலின் குழந்தைத் தனம்... வருத்தப்பட்ட குலாம் நபி... - குலாம் நபி ஆசாத் விலகல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டார். அவரது ராஜினாமா கடிதத்தின் சாராம்சம் பின்வருமாறு.

குலாம் நபி ஆசாத் ராஜினாமா கடிதத்தின் சாராம்சம்

author img

By

Published : Aug 26, 2022, 4:18 PM IST

Updated : Aug 26, 2022, 4:51 PM IST

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பிய கடிதத்தில் ராஜினாமா கடிதத்தில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 1970ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். 1976ஆம் ஆம் ஆண்டு மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சிகளில் மத்திய அமைச்சராக பணிபுரிந்தேன்.

1980ஆம் ஆண்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தேன். காங்கிரஸ் தலைவராக நீங்கள் 2 முறை ஆட்சியமைக்க காரணமாக இருந்தீர்கள். மூத்த தலைவர்களின் ஆலோசனைகளை ஒருமனதாக கேட்டீர்கள். முக்கிய பொறுப்புகளை எங்களிடம் ஒப்படைத்தீர்கள். இதுவே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு காரணம்.

ராகுல் காந்தி அரசியல் வருகைக்கு பின், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் முறை முற்றிலும் தகர்க்கப்பட்டது. மூத்த தலைவர்கள் அனைவரும் ஓரம் கட்டப்பட்டனர். அனுபவமற்ற உறுப்பினர்கள் கட்சியில் ஆளுமை செலுத்தினர். இந்த குழந்தைத் தனமான செயல்களால் இந்திய அரசின் மாண்பு சீர் குலைந்தது.

காங்கிரஸ் தலைவராக நீங்கள் பதவியேற்ற பின், குறிப்பாக 1998ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 3 முறை காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. இந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இப்போது வரை அமல்படுத்தப்படவில்லை. இவற்றை செயல்படுத்தும்படி உங்களிடமும் ராகுல் காந்தியிடமும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால், பரிசீலிக்கப்படவில்லை.

உங்கள் தலைமையின்கீழும், ராகுல் காந்தியின் தலைமையின் கீழும் தொடர்ந்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் சந்தித்தோம். கேவலமான தோல்வியை சந்தித்தோம். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் கூட்டணி கட்சியாக உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உறுதியை சீரழித்த ரிமோட் கண்ட்ரோல் மாடல், இப்போது காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டுவருகிறது. இதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கிறீர்கள். 2020ஆம் ஆண்டு என்னுடன் முன்னாள் மத்திய அமைச்சர்கள் கட்சியின் நிலைமை குறித்து கவலைப்பட்டோம். அதனை மாற்ற உங்களுக்கு கடிதம் எழுதினோம்.

இதை காரணம் காட்டி, கட்சியை கட்டுப்படுத்தும் கும்பல் எங்களை தாக்கி பேசியது, அவமதித்தது. இதுபோன்ற காரணங்களாலேயே மீட்க முடியாத அளவுக்கு கட்சியின் நிலைமை சென்றுவிட்டது. இந்திரா காந்தி காலம் முதல் உங்கள் காலம் வரை உங்களது குடும்பத்தோடு நெருக்கமான உறவு கொண்டிருப்பவந் நான்.

ஆகவே உங்களது தனிப்பட்ட இன்ப துன்பங்களில் எப்போதும் அக்கறை கொண்டிருப்பேன். எந்த லட்சியங்களுக்காக காங்கிரஸ் கட்சியில் என்னை அர்ப்பணித்துக்கொண்டேனோ அவற்றுக்காக கட்சிக்கு வெளியே இருந்து பாடுபடுவேன். காங்கிரஸ் கட்சி உடனான எனது அரை நூற்றாண்டு பழமையான தொடர்பை மிகுந்த வருத்தத்துடனும், வலியுடனும் துண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகல்

Last Updated : Aug 26, 2022, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.