ETV Bharat / bharat

கேரள உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் - கேரள உள்ளாட்சி தேர்தல்

கேரள உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்டமாக ஐந்து மாவட்டங்கள், 395 உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற உள்ளது.

Kerala local body polls  local body polls Kerala  கேரள உள்ளாட்சி தேர்தல்  395 உள்ளாச்சி அமைப்புகள்
Kerala local body polls
author img

By

Published : Dec 8, 2020, 10:46 AM IST

கேரள உள்ளாட்சி மன்றத் தேர்தலின் முதல்கட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் 395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆறாயிரத்து 910 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும்.

மாநில தேர்தல் ஆணையத்தின்படி, முதல்கட்டத்தில் 88 லட்சத்து 26 ஆயிரத்து 873 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 41 லட்சத்து 58 ஆயிரத்து 395 ஆண்கள், 46 லட்சத்து 68 ஆயிரத்து 267 பெண்கள் மற்றும் 61 திருநங்கைகள் உள்ளனர்.

இதில் 150 என்.ஆர்.ஐ.க்கள், 42 ஆயிரத்து 530 முதல் முறையாக வாக்காளர்கள் உள்ளனர். 11 ஆயிரத்து 225 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

320 பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெப்காஸ்டிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 56 ஆயிரத்து 122 பணியாளர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்பு வாக்கெடுப்புகள் (பஞ்சாயத்துகள், நகராட்சிகள், கார்ப்பரேஷன்கள்) கடுமையான கோவிட் -19 விதிமுறைகளின்படி நடத்தப்படுகின்றன, வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து வெளியேறும்போது தங்கள் கைகளைத் சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் கட்டாயமாகும். ஒரே நேரத்தில் மூன்று வாக்காளர்கள் மட்டுமே சாவடிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அஞ்சல் வாக்குச்சீட்டைத் தவிர, வழக்கமான வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் கோவிட் -19 நோயாளிகளுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறது.

சிறப்பு வாக்காளர்களாக பட்டியலிடப்பட்ட அவர்கள், மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச் சாவடிக்கு வர வேண்டும். சிறப்பு வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைவதற்கு முன்பு வாக்குப்பதிவு அலுவலர்கள், முகவர்கள் பிபிஇ கிட் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறப்பு பேனாவைப் பயன்படுத்தி வாக்காளர் பதிவேட்டில் கையொப்பம் பதிவுசெய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் சுகாதாரத் துறையால் வாக்குச் சாவடிக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

அரசு சாரா கட்டுப்பாட்டு நிறுவனங்கள் அல்லது வீடுகளில் வசிக்கும் சிறப்பு வாக்காளர்கள் தங்கள் சொந்த செலவில் பிபிஇ கிட் கொண்டுவர வேண்டும். அவர்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள் பிபிஇ கிட் அணிய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 தொற்றாளர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்துவரும் கேரள அரசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.