ETV Bharat / bharat

ஹோட்டல் அதிபர் கொலை சம்பவம்...பணம் பறிக்க கொலையாளிகள் போட்ட பிளான்...அதிர வைக்கும் பின்னணி! - மிரட்டி பணம் பறிக்க முயற்சி

கேரள ஹோட்டல் அதிபர் கொலை சம்பவத்தில், அவரை மிரட்டி பணம் பறிக்க கொலையாளிகள் திட்டமிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பணம் பறிக்கும் கும்பலை எதிர்த்து பேசியதால், ஹோட்டல் அதிபர் கொலை செய்யப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.

Kerala murder
கேரளா கொலை
author img

By

Published : May 27, 2023, 10:37 PM IST

மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திரூர் பகுதியை சேர்ந்தவர் சித்திக்(58). கோழிக்கோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தார். கடந்த 18ஆம் தேதி மாயமான சித்திக், கடந்த சில நாட்களுக்கு முன் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில், டிராலி பேக்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் ஷிபிலி, ஃபர்ஹானா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கோழிக்கோடு அருகே உள்ள ஓலவன்னா பகுதியில் சித்திக் நடத்தி வந்த ஹோட்டலில் ஷிபிலி(22) பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனால் ஏதோ காரணத்தால், ஷபிலியை வேலையில் இருந்து சித்திக் நீக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது ஷிபிலி கடும் கோபத்தில் இருந்துள்ளார். மேலும் சித்திக்கிடம் இருந்து பணம் பறிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது தோழி ஃபர்ஹானா (18), அவரது நண்பர் ஆஷிக் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். சம்பவத்தன்று கோழிக்கோடு எரஞ்சிபாலம் பகுதியில் உள்ள ஹோட்டலில், சித்திக் அறை எடுத்து தங்கியிருந்தார். அங்கு ஷிபிலி, ஃபர்ஹானா, ஆஷிக் ஆகியோர் சென்றுள்ளனர். சித்திக்கை ஆபாசமாக படம் எடுத்து, அதன்பிறகு அவரிடம் பணம் கேட்டு மிரட்ட 3 பேரும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி சித்திக்கிடம் ஆடைகளை கழற்றுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஃபர்ஹானா தனது கையில் வைத்திருந்த சுத்தியலை ஷிபிலியிடம் கொடுக்க, அவர் சித்திக்கின் தலையில் அடித்துள்ளார். சித்திக் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில், அவரது மார்பில் பலமுறை எட்டி உதைத்துள்ளார் ஆஷிக். பிரேத பரிசோதனையில், சித்திக்கின் விலா எலும்புகள் உடைந்ததது தெரியவந்துள்ளது. சித்திக் இறந்த பிறகு எலக்ட்ரிக் கட்டர் மூலம் உடலை துண்டு துண்டாக வெட்டிய கொலையாளிகள், 2 டிராலி பேக்கில் அதை போட்டுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக கிடைத்துள்ளது.

இதுகுறித்து மலப்புரம் காவல் கண்காணிப்பாளர் சுஜித் கூறுகையில், "மே 18ம் தேதி சித்திக் காணாமல் போன நிலையில், அவரது குடும்பத்தினர் மே 22ம் தேதி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் சித்திக்கின் ஹோட்டலில் பணியாற்றி வந்த முன்னாள் ஊழியர் ஷிபிலியும் மாயமானது தெரியவந்தது. அவர் மீது சந்தேகம் வலுத்தது.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அட்டப்பாடி வனப்பகுதியில் மீட்கப்பட்ட சடலம் சித்திக் உடையது என்பது உறுதி செய்யப்பட்டது. கொலையாளிகள் ஷிபிலி, ஃபர்ஹானா ஆகியோர் சென்னைக்கு தப்பிச்சென்ற நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: சித்தப்பா கொலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பா? சிபிஐ கொடுத்த ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.