ETV Bharat / bharat

இந்தியாவில் முதல் முறையாக கேரள அரசின் OTT தளம் - இந்தியாவில் முறை

கேரளா அரசு ரசிகர்களுக்கு புதிதாக C Space என்ற OTT தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் அரசு சார்பில் OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.

கேரள அரசின் OTT தளம்- இந்தியாவில் முதல் முறை!

author img

By

Published : May 19, 2022, 11:06 AM IST

திருவனந்தபுரம்(கேரளா): இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் அரசால் வடிவமைக்கப்பட்ட C Space என்ற OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளமானது கேரளாவின் பிறந்த தினமான நவம்பர் 1 அன்று வெளியிடப் போவதாக அம்மாநில் கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியன் கூறியுள்ளார். மேலும் இந்த தளமானது கேரளா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த C Space என்ற OTT தளமானது பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளருக்கு வருவாயை வழங்கும். இது 'ஒரு முறை பார்ப்பதற்கு பணம் செலுத்துதல்’ முறையில் செயல்பட உள்ளது. பார்வையாளர் அவர் பார்க்க விரும்பும் படங்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது. திரையரங்கில் வெளியான பிறகுதான் C Space என்ற OTT தளத்தில் படங்கள் திரையிடப்படும்.

அரசின் இந்த OTT தளத்தில் திரைப்படங்கள் தவிர, ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களும் ஸ்ட்ரீம் செய்யப்படும். கலைத்திறன் மிக்க திரைப்படங்கள் மற்றும் மாநில, தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

ஜூன் 1ம் தேதி முதல் பிளாட்பாரத்தில் திரைப்படங்கள் பதிவு செய்யத் தொடங்கப்படும் எனவும், இதற்கான வசதிகள் KSFDC தலைமை அலுவலகத்திலும், திருவனந்தபுரத்தில் உள்ள சித்ராஞ்சலி ஸ்டுடியோவிலும் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.