கேரள மாநிலத்தில் இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 1.75 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது. பொதுக்கல்வி புத்துணர்வுப் பணி அமல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 6.8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
முந்தைய கல்வி ஆண்டோடு ஒப்பிடும்போது, 8170 பிள்ளைகள் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அதேபோல் 43 ஆயிரத்து 789 மாணவர்கள் 5 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். மேலும், 8ஆம் வகுப்பில், 35 ஆயிரத்து 606 பேர் சேர்ந்துள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 074 மாணவர்கள் பல்வேறு வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். மொத்தம் 33 லட்சத்து 75 ஆயிரத்து 340 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு 47 ஆயிரத்து 760 மாணவர்கள் அதிமாக சேர்ந்துள்ளனர். ஆனால் அரசு உதவிபெறாத பள்ளிகளின் மொத்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையில் 91 ஆயிரத்து 510ஆக குறைந்துள்ளது.
இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது, பொதுக்கல்வி புத்துணர்வு பணியில் ஒரு பகுதியாக, பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதன் விளைவாக இது அமைந்துள்ளது. இப்போது, பொதுப்பள்ளிகளில் உயர் தர வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுங்கச்சாவடிகளில் கட்டாய ஃபாஸ்டேக் நடைமுறை பிப்.15 வரை ஒத்திவைப்பு