ETV Bharat / bharat

K- store: ரேஷன் கடைகள் கே-ஸ்டோர்களாக மாற்றம் - கேரள அரசின் ஹைடெக் திட்டம்!

பொது விநியோக அமைப்பை வலுப்படுத்தும் விதமாக கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளை கே-ஸ்டோர்களாக மாற்றி அர்சு நடவடிக்கை எடுத்து உள்ளது.

Kerala
Kerala
author img

By

Published : May 15, 2023, 7:54 PM IST

திருவனந்தபுரம் : கேரளாவில் வங்கி உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவைகளை ரேஷன் கடைகளிலேயே மக்கள் பெறும் வகையிலான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ரேஷன் கடைகளை கே - ஸ்டோர்ஸ் ( K-Stores) என அரசு மறுபெயரிட்டு உள்ளது. மேலும் பல்வேறு பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை இந்த கே - ஸ்டோர்களில் மக்கள் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்து உள்ளது.

மாநிலத்தில் பொது விநியோக அமைப்பை வலுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளை கே - ஸ்டோர்களாக மாற்றும் திட்டத்தை கேரள அரசு மேற்கொண்டு உள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைகள் மீதான மக்களின் பிம்பம் மற்றும் முகத்தை மாற்றும் முயற்சியாக அமையும் என அரசு தெரிவித்து உள்ளது.

ரேஷன் கடைகளை கே - ஸ்டோர் எனப்படும் ஹைடெக் மையங்களாக மாற்றும் திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அதில் ரேஷன் கடைகளை ஹைடெக் மையங்களாக மாற்றும் திட்டத்தில் மாநிம் முழுவதும் முதற்கட்டமாக 108 கே - ஸ்டோர்கள் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 14 ஆயிரம் ரேஷன் கடைகளை கே -ஸ்டோர்களாக மாற்றும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இடதுசாரி ஜனநாயக அரசின் 100 நாட்கள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ரேஷன் கடைகள் அனைத்தையும் கே-ஸ்டோர்களாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் பிரனராயி விஜயன் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளின் உள்கட்டமைப்பை அதிகரித்து, மக்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொது விநியோக சங்கிலியை மேம்படுத்தவும், அரசு சேவைகள் மற்றும் பொருட்களை எளிதில் மக்களுக்கு கிடைக்கச் செய்வதை இந்த கே- ஸ்டோர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் நிதி உதவி மூலம் ரேஷன் கடைகளின் உள்கட்டமைப்புகள் கே - ஸ்டோர்களாக மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கே -ஸ்டோர்களை 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தணைகள் மேற்கொள்ளும் மினி வங்கி அமைப்புகளாக மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யுபிஐ வசதி மூலம் ஆன்லைன் பணம் செலுத்துதல், அரசு சேவைகள், மின்சார இணைப்புகள் மற்றும் பில், தண்ணீர் வரி உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான பொது விநியோக மையங்கள் மூலம் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வது, பால் பொருட்கள் ​​மற்றும் ஐந்து கிலோ சமையல் சிலிண்டர் சப்ளை ஆகியவை முதல் கட்டமாக இந்த கே ஸ்டோர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : "மோடி மேஜிக் இமேஜை வென்ற பிராண்ட் ராகுல்" - காங்கிரஸ் களியாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.